Home உலக செய்திகள் கொரோனா நோயாளர் அதிகமாக இறந்த நாடுகள் வரிசையில் பிரிட்டன் 3ம் இடம்!

கொரோனா நோயாளர் அதிகமாக இறந்த நாடுகள் வரிசையில் பிரிட்டன் 3ம் இடம்!

304
0

கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உலகை உலுக்கி வரும் கொரோனா நோய் தாக்கத்தால் இதுவரை 234,702 மக்கள் இறந்துள்ள நிலையில் அதிகளவான இறப்புக்களை கொண்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா ஆகிய நாடுகள் முறையே 1,2,3 என்ற வரிசையில் முன்னிலையில் உள்ளன.

நேற்று (30/04) வரை வெளியான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 26,771 கொரோனா நோயாளர் இதுவரை இறந்துள்ளதை அடுத்து உலகில் அதிகளவில் கொரோனா நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கையில் பிரித்தானியா 3ம் இடத்தை எட்டிப் பிடித்துள்ளதோடு, உலகளாவிய ரீதியில் கொரோனாவால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் 4ம் இடத்தை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை உலகளாவிய ரீதியில் 3.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நாளொன்றுக்கு சராசரி 5000 பேர் வரையில் இறந்துவருவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.