Home முக்கிய செய்திகள் மே 15 க்கு முன்னர் நாடு இயல்பு நிலை திரும்பினாலே ஜூனில் தேர்தல்:

மே 15 க்கு முன்னர் நாடு இயல்பு நிலை திரும்பினாலே ஜூனில் தேர்தல்:

108
0

மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாடு இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் ஆணிக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாடு இயல்பு நிலைக்கு வந்து, குறைந்தது 35 நாட்களின் பின்னரே தேர்தல் நடைபெறவேண்டும் என குறிப்பிட்டுள்ள மஹிந்த தேசப்பிரிய தேர்தலை நடாத்த சுகாதார துறையினரின் முழுமையான பரிந்துரை அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்கான முன்னேற்பாடுகலை தேர்தல் திணைக்களம் மேற்கொண்டுவருவதாகவும், இருப்பினும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள், தன்னார்வ நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புக்கள் போன்ரவற்றின் கருத்துக்களை உள்வாங்கி 10 நாட்களுக்கு ஒரு முறை தேர்தல் ஆணைக்குழு ஒன்றுகூடி தேர்தலுக்கான சாதகமான சூழல் உள்ளதா என ஆராயும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.