Home செய்திகள் தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மேலும் 2 மாதம் நீடிப்பு!

தற்காலிக இடமாற்றம் பெற்ற ஆசிரியர் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கு மேலும் 2 மாதம் நீடிப்பு!

154
0

வட மாகாணத்திற்கு உட்பட்டு தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்கள் அதே இடங்களில் மேலும் இரண்டு மாதங்கள் பணியாற்ற முடியும் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்திற்கு உட்பட்ட ஆசிரியர் பலர் தற்காலிகமாக மருத்துவம், பிரசவ காலம் உள்ளிட்ட சில காரணங்களுக்காக பிற மாவட்டங்களில் இனைப்பை பெற்ற அனைத்து ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகஸ்தர்களுக்கும் மேலும் 2 மாத காலம் நீடிக்கப்படுவதோடு தற்போது பணியாற்றிய பாடசாலைகளிலேயே ஒப்பமிட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், சம்பளமற்ற விடுமுறையில் வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் பணிக்கு திரும்ப முடியாததை எண்ணி பதட்டமடஇய தேவையில்லை என்றும், தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மேலும் 2 மாதங்கள் சம்பளமற்ற விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.