Home செய்திகள் அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுபினர்களையும் அலரிமாளிகைக்கு வருமாறு பிரதமர் அழைப்பு!

அனைத்து முன்னாள் பாராளுமன்ற உறுபினர்களையும் அலரிமாளிகைக்கு வருமாறு பிரதமர் அழைப்பு!

62
0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் திங்கட்கிழமை (04-05-2020) முற்பகல் 10:00 மணிக்கு விசேட கலந்துரையாடலுக்காக அலரிமாளிகைக்கு வருமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பாராளுமன்றத்தை மீள கூட்டுமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதை தொடர்ந்தே பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

இதே வேளை, ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெற்று புதிய பாராளுமன்றம் அமையாவிட்டால் பளைய பாராளுமன்றத்தை கூட்டி நாட்டை நிர்வகிக்க வேண்டும் எனவும், ஏப்ரல் 30 இன் பின்னர் பாராளுமன்றம் இல்லாமல் நாட்டை தனி ஒருவர் நிர்வகிக்க முடியாது எனவும் சாட்ட விதிமுறையை சுட்டிக்காட்டி ஜனாதிபதியின் சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இரு வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.