Home செய்திகள் ஊடக ஜாம்பவான் “தராகி சிவராம்” ற்கு யாழ் ஊடக மையத்தில் அஞ்சலி:

ஊடக ஜாம்பவான் “தராகி சிவராம்” ற்கு யாழ் ஊடக மையத்தில் அஞ்சலி:

352
0

இலங்கையின் தமிழ் ஊடகவியலாளரும், ஊடக ஜாம்பவானும் ஆகிய “தராகி சிவராம்” ற்கு யாழ் ஊடக மையத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

தராகி சிவராம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 15 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு யாழ் ஊடக மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக வழமை போல் அல்லாது மிகவும் எழிமையாக இன் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

பேனா முனையிலும், புகைப்பட மற்றும் ஒளிப்படக் கருவிகளோடும் உண்மைகளை வெளிக்கொண்டுவந்ததற்காகவே படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து அவர் தம் வழித்தடங்களை அழிய விடாது காத்து அர்ப்பணிப்போடும், உறுதியோடும் பயனிக்க வேண்டியது ஒவ்வோர் ஊடகவியலாளரதும் கடப்பாடாகும்.