Home செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 622 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 622 ஆக உயர்வு!

97
0

இலங்கையில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 622 ஆக உயர்வடைந்துள்ளது.

இதந் காரணம்காக நேற்று இரவு அமுலுக்கு வந்த ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டத்தை நீடித்து நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா பரிசோதனைகளை நடாத்திய பின் ஊரடங்கை தளர்த்தி நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருமாறு பலதரப்பினரிடமும் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இலங்கைத் தீவீல் இதுவரை கொரோனா நோயினால் 7 பேர் மட்டுமே உயிரிழந்துள்ள போதும், கொரோனா நோ உறுதி செய்யப்பட்டவர்களாக 622 பேரும், கொரோனா நோய்த் தொற்று சந்தேக நபர்களாக தனிமைப்படுத்தல் முகாம்களில் 3292 பேரும் உள்ளனர்.

அத்தோடு, கடற்படையினர், இராணுவத்தினர், உட்பட பொலிஸாருக்கும் கொரோனா நோய் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பழகிய, அவர்கள் தங்கிய இடங்களில் இருந்த ஏனைய முப்படையினரும் கொரோனா தடுப்பு, மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடலாம் என்பதால் நாட்டில் பரவலாக கொரோனா நோய் அனைத்து இடங்களையும் தாக்க வாய்ப்பு உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.