Home செய்திகள் 21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு – மக்கள் நடமாட்டத்தை குறைக்க விசேட நடைமுறை!

21 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வு – மக்கள் நடமாட்டத்தை குறைக்க விசேட நடைமுறை!

57
0

கொழும்பு , கம்பஹா , களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த காலப்பகுதியில் வெளியில் செல்வோருக்காக விசேட ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி இன்றைய தினத்தில் அடையாள அட்டையில் இறுதி இலக்கங்களாக 3 அல்லது 4 என்ற இலக்கத்தை கொண்டவர்கள் வெளியில் செல்ல முடியும். அத்துடன் 5 , 6 இலக்கங்களை கொண்டவர்கள் புதன்கிழமையும், 7 ,8 இலக்கங்களை கொண்டவர்கள் வியாழக்கிழமையும், 9 ,0 இலக்கத்தை கொண்டவர்கள் வெளியில் செல்ல முடியும். அதேபோன்று 1 மற்றும் 2 இலக்கத்தை கொண்டவர்கள் திங்கட்கிழமையே வெளியில் செல்ல முடியும்.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் கட்டாயம் ஒரு மீற்றர் இடைவெளியை பேண வேண்டுமெனவும், சமூக இடைவெளியை முறையாக பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்காக சிவில் உடையில் பொலிஸார் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனதெரிவித்துள்ளார்.