Home செய்திகள் சக்கர நாற்காலி வாழ்க்கையோடும் சாதித்து காட்டிய இரு மாணவிகள் !

சக்கர நாற்காலி வாழ்க்கையோடும் சாதித்து காட்டிய இரு மாணவிகள் !

106
0

முள்ளியவளை கலைமகள் வித்தியாலய மாணவிகள் இருவர் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

பவதாரணி, விதுர்ஷிகா ஆகிய இரு மாணவிகளுமே க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதித்துக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு சாதனைப் பெண்களான பவதாரணி (8A, B), விதுர்ஷிகா (6A, B, 2C) ஆகிய இருவரும் போர்சூழலில் சிக்கி உடலின் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட நிலையில் சக்ர நாற்காலியின் உதவியோடு தம் வாழ்வை களிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு – கெங்காதரன் பவதாரணி முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணைத் தாக்குதலில் சிக்கி முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

இறுதிப்போர் நெருக்கடியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் போன பின்னர் வவுனியா செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி நலன்புரி முகாமில் தங்கியிருந்தபோது இராணுத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த விதுர்ஷிகா முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட நிலையில் எழுந்து நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்தார்.

இவ் விருவரின் விடா முயற்சியும், மன உறுதியும் ஏனைய மாற்றுத்திறணாளிகளுக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.