Home செய்திகள் முப்படையினரை தனிமைப்படுத்தும் முகாமாகும் யாழ்-கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி!

முப்படையினரை தனிமைப்படுத்தும் முகாமாகும் யாழ்-கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி!

94
0

கொரோனா நோய்த்தொற்று சந்தேக நபர்களாக கருதப்படும் முப்படையினரை தனிமைப்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் – கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்த படையினரை முகாம்களுக்கு திரும்புமாறு மணிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு வரும் படையினரையே 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தும் நோக்கோடு இத் தனிமைப்படுத்தல் முகாம் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக யாழ்ப்பாணம் – கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அனைத்து விடுதிகளும் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளமஇ இங்கு குறிப்பிடத்தக்கது.