Home செய்திகள் செந்தூரனின் உடல் கட்சிக் கொடி போற்றி மதிப்பளிக்கப்பட்டு தகனம்!

செந்தூரனின் உடல் கட்சிக் கொடி போற்றி மதிப்பளிக்கப்பட்டு தகனம்!

102
0

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரும் வலி கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினருமான இலகுநாதன் செந்தூரன் அவர்களது இறுதி நிகழ்வுகள் அக்கட்சியின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

நேற்று 26.04.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கோப்பாய் வடக்கு பிராமனோடையிலுள்ள அன்னாரது இல்லத்தில் இறுகிக்கிரியை நடைபெற்று பின்னர் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

செந்தூரனின் உடலுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியின் கட்சிக் கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.