Home செய்திகள் 505 ஆக அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

505 ஆக அதிகரித்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

128
0

இலங்கையில் நேற்றைய தினம் மட்டும் 45 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாடளாவிய ரீதியில் மொத்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரவு 10:00 மணிக்கு வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் படியே மேற்படி எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

இதே வேளை, இராணூவ கப்டன் உட்பட 95 கடற்படையினருக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

358 கொரோனா நோயாளர்கள் அங்கொட தேசிய வைத்தியசாலை, வெலிகந்த -முல்லேரியா வைத்தியசாலை, சிலாபம் – இரணவில வைத்தியசாலை, மட்டு – காத்தான்குடி வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் மூன்று (3) வெளிநாட்டவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.