Home Uncategorized வருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை!

வருட இறுதிக்குள் 100,000 பேர் இறக்கும் அபாயம் – பிடிட்டனில் எச்சரிக்கை!

99
0

பிரித்தானியாவில் கொரோனா நோயாளர் தினமும் பெரும் எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டும், இறந்தும் வரும் நிலையில், இவ் வருட இறுதிக்குள் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை 100,000 ஐ தாண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் – அண்ணளவாக 5000 பேர் வரையில் தினமும் கொரோனா நோயாளர்களாக இனம்காணப்பட்டும், 500 முதல் 800 வரையான மக்கள் தினமும் குறித்த நோயினால் உயிரிழந்தும் வரும் நிலையிலும், தற்போதுள்ள “இயல்புநிலை முடக்கத்தை” நீக்க ஆலோசித்துவரும் நிலையிலேயே பிரித்தானிய அரசாங்கத்தை அதன் ஆலோசனைக் குழு மேற்படி எச்சரித்துள்ளது.

26-04-2020 இன்று பிற்பகல் 3:00 மணிக்கு வெளியான தகவலின் அடிப்படையில் கடந்த 24 மணித்தியாலங்களில் இறந்த 413 பேருடன் சேர்த்து இதுவரை கொரோனா நோயினால் 20,732 பேர் பிரித்தானியாவில் வைத்தியசாலைகளில் உயிரிழந்துள்ளனர். இது தவிர வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளிலும், பராமரிப்பு நிலையங்களிலும் கொரோனா நோயினால் இறந்து அது தொடர்பான விசாரணைகளும், பதிவுகளும் வந்து சேராமல் உள்ள மரணங்களையும் சேர்த்தால் மரணித்த கொரோனா நோயாளர் எண்ணிக்கை 30,000 ஐ கடந்திருக்கும் என கருதப்படுகிறது.

இன்று பிரித்தானிய நேரம் மாலை 3:00 மணி வரை பிரித்தானியாவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலை பதிவுக்குள்ளானோர் எண்ணிக்கை மட்டும் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக இனம்காணப்பட்ட 4463 புதிய கொரோனா நோயாளர்களுடன் சேர்த்து 152,840 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.