Home செய்திகள் ஏழாலையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

ஏழாலையில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

87
0

யாழ்ப்பாணம் – ஏழாலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் எரிந்த நிலையில் மீடக்பபட்டுள்ளது.

இன்று (26/04) காலை ஏழாலை தெற்கு பிரிவில் உள்ள மயிலங்காடு பகுதியில் தோட்டங்களும், குடிமனைகளும் நிறைந்த பகுதியில் உள்ள வீதியில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை சடலம் இனம் காணப்படாத நிலையில் , கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்தோடு தாம் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.