Home செய்திகள் இலங்கையில் அதி தீவிரம் அடையும் கொரோனா – ஒரு வாரத்தில் 200 பேருக்கு தொற்று!

இலங்கையில் அதி தீவிரம் அடையும் கொரோனா – ஒரு வாரத்தில் 200 பேருக்கு தொற்று!

376
0

இன்றும் (26/04/2020) 19 பேருக்கு COVID-19 வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளம கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 471 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 200 பேர் புதிதாக கொரோனா நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

  • 26 April – 19 புதிய கொரோனா நோயாளர்
  • 25 April – 35 புதிய கொரோனா நோயாளர்
  • 24 April – 49 புதிய கொரோனா நோயாளர்
  • 23 April – 38 புதிய கொரோனா நோயாளர்
  • 22 April – 20 புதிய கொரோனா நோயாளர்
  • 21 April – 6 புதிய கொரோனா நோயாளர்
  • 20 April – 33 புதிய கொரோனா நோயாளர்

அதிதீவிரம் அடைந்து வரும் இந் நோய் பரவலை தடுத்து மக்களின் உயிரிழப்புக்களை தடுக்க சுகாதாரத் தூரையும், அரசாங்கமும் துரித நடவடிக்கை எடுக்க தவறின் இலங்கைத் தீவில் பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

வளர்ச்சி அடைந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகளே இன்றுவரை சரியான நோய்த்தடுப்பு மருந்து இன்றியும், நோயாளர்களை பராமரிக்கும் வசதிகள் பற்றாமலும் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்களை சந்தித்துவரும் இச் சூழலில் இலங்கை போன்ற நாடுகளில் இந் நோய் பரவினால் உயிரிழப்புக்கள் தவிர்க்கமுடியாதவையே. – வருமுன் காப்போம்