Home உலக செய்திகள் 2 இலட்சம் மக்கள் உயிரிழப்பு – 28 இலட்சம் மக்கள் பாதிப்பு!

2 இலட்சம் மக்கள் உயிரிழப்பு – 28 இலட்சம் மக்கள் பாதிப்பு!

92
0

கடந்த மூன்று மாதங்களாக உலகை உலகை உறை நிலைக்குள் கொண்டுவந்துள்ள கொரோனா நோய்த் தாக்கத்தால் சுமார் 2 இலட்சம் மக்கள் இறந்துள்ளதுடன், 28 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு உலகளவில் இறந்த 2 இலட்சம் மக்களில் நாலில் ஒரு பகுதியினர் அமெரிக்காவில் மட்டும் இறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளொன்றிற்கு உலகளாவிய ரீதியில் சுமார் 2000 – 3000 பேர் குறித்த நோயினால் இறந்துவரும் நிலையில், தற்போது இரண்டு இலட்சத்தை அண்மித்திருக்கும் மரணம் இன்று மாலைக்குள் இரண்டு இலட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிக உயிரிழப்புக்கள் கொண்ட நாடுகளாக முறையே

  • அமெரிக்கா – 52,217 பேர் மரணம்
  • இத்தாலி – 25,969 பேர் மரணம்
  • ஸ்பெயின் – 22,524 பேர் மரணம்
  • பிரான்ஸ் – 22,245 பேர் மரணம்
  • பிரித்தானியா – 19,506 பேர் மரணம்

ஆகிய நாடுகள் முன்னணியில் இருக்கின்றன.