
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் காணாமல் போயிருந்த நிலையில் இன்று காலை தொண்டைமானாறு மயிலியதனை கடற்கரையோரமாக குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சூழலில் செந்தூரன் மக்களுக்கான உதவிப் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தவர் என்று தெரிவிக்கபடுகிறது.