Home செய்திகள் யாழ் பல்கலையின் நிர்வாகப் பணிகள் 29 முதல் ஆரம்பம் – தொற்று நீக்கல் பணிகள் தீவிரம்:

யாழ் பல்கலையின் நிர்வாகப் பணிகள் 29 முதல் ஆரம்பம் – தொற்று நீக்கல் பணிகள் தீவிரம்:

90
0

இம்மாதம் 29 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் பல்கலைக்கழம் கல்விசாரா ஊளியர் உட்பட்ட நிர்வாக பணிகளை ஆரம்பிக்க உள்ளதாக தீர்மானித்துள்ளது.

இதற்கமைய பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இராணூவத்தினர் இன்றைய (24/04) தினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தொற்று நீக்கல் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கொரோனா நோய்த் தொற்று அச்சம் காரணமாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில் யாழ் பல்கலைக்கழகம் மட்டும் இத் திடீர் முடிவை எடுத்துள்ளன.

மூன்று வாரங்களுக்கு மேலாக யாழ் குடா நாடு ஊரடங்கு சட்டத்தால் முடக்கப்பட்டு கடந்த திங்கட் கிழமை முதலே பகல் நேரங்களில் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடமாகண சுகாதார அதிகாரி இன்னமும் கொரோனா அச்சம் முற்றாக நீங்கவில்லை. குடா நாட்டில் உள்ள அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. என எச்சரித்திருந்தார்.

சுமார் ஆறு (6) இலட்சம் மக்கள் வசிக்கும் 1300 க்கும் குறைவானவரளே இதுவரை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டுள்ள இவ் அவசர முடிவு ஊளியர்களையும், மாணவர்களையும் சினம் கொள்ள வைத்துள்ளதோடு, பெற்றோரும் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.