Home தாயக செய்திகள் ஒரு வாரத்தில் 129 கொரோனா நோயாளர் – வைரஸ் தாக்கம் தீவிரம்!

ஒரு வாரத்தில் 129 கொரோனா நோயாளர் – வைரஸ் தாக்கம் தீவிரம்!

277
0

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.

இன்று இனம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களுடன் சேர்த்து இலங்கை முழுவதுமாக கொரோனா நோயாளர் எண்ணிக்கை 373 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த 7 நாட்களில் மட்டும் 129 பேர் கொரோனா தொற்ராளர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.

பெப்ரவரி 15ம் திகதி முதலாவது நோயாளி இனம்கானப்பட்ட போதும் மார்ச் 13 வரை மிக குறைவாகவே நோய்த்தொற்று காணப்பட்டிருந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல வேகம் கொள்ள ஆரம்பித்து தற்போது 373 பேரை தாக்கியுள்ளது COVID-19 வைரஸ்.

மார்ச் 28ம் திகதி முதலாவது கொரோனா நோயாளி மரணமடைந்ததை அடுத்து அடுத்த 10 நாட்களில் தொடர்ந்து 7 பேர் குறித்த நோயினால் மரணமடைந்திருந்தனர். அதன் பின்னர் இன்றுவரை மரணங்கள் இல்லாவிட்டாலும் முன்பிலும் பார்க்க அதிக நோயாளர்கள் இனம் காணப்படுவது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.