Home செய்திகள் யாழில் மினி சூறாவளி – வீடுகள், ஆலயங்கள் சேதம்:

யாழில் மினி சூறாவளி – வீடுகள், ஆலயங்கள் சேதம்:

143
0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றினால் வீடுகள், ஆலயங்கள் என்பன சேதமடைந்துள்ளன.

யாழ்/தென்மராட்சி மறவன்புலவு கிழக்கு மணற்காட்டு கந்தசுவாமி ஆலயத்தை அண்டிய பகுதிகளிலேயே நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் மினி சூறாவளி தாக்கியுள்ளது.

சுமார் மூன்று (3) நிமிடங்கள் வரை நிடித்த குறித்த மினி சூறாவவளிக் காற்றினால், கந்தசுவாமி ஆலயத்தின் கூரை ஓடுகள் காற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளதோடு, அதை அண்மித்த வீடுகளிலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தவிர மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், கோழிக் கூடுகள், மாட்டு கொட்டில்கள் என்பனவும் சேதத்திற்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.