Home உலக செய்திகள் ஈழத்து கலைஞரும், புகழ்பெற்ற நாடக நடிகருமான ஏ.ரகுநாதன் காலமானார்!

ஈழத்து கலைஞரும், புகழ்பெற்ற நாடக நடிகருமான ஏ.ரகுநாதன் காலமானார்!

179
0

ஈழத்து கலைஞரும், புகழ்பெற்ற நாடக கலைஞருமான ஏ.ரகுநாதன் அவர்கள் கொரோனா நோய் காரணமாக நேற்ரைய தினம் (22-04-2020) பிரான்ஸில் காலமானார்.

1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நவாலியில் பிறந்த இவர், தனது 85 ஆவது வயதில் கொடிய கொரோனா நோயிற்கு உள்ளாகி உயிர் துறந்தமை ஈழத் தமிழர்களை சோகத்தில் ஆழ்தியுள்ளது.

மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் தனது 12 ஆவது வயதில் அங்கேயே தனது முதலாவது நாடகத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு ஒப்பாக இவரின் அன்றைய நடிப்பு இவரின் கலைத்திறணை வெளிப்படுத்தியிருந்தது. அதன் காரணமாக பல அவருக்கு கொடுத்த ஊக்கமும், வாழ்த்துக்களும் அவரை நல்ல ஒரு கலைஞனாக உருவாக்கி இருந்தது.

சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, தேரோட்டி மகன், ரகுபதி ராகவ ராஜாராம், பொன்ற நாடகங்களில் தனி முத்திரை பதித்தவர். இதைக் கடந்து “நிர்மலா” எனும் திரைப்படத்தை தயாரித்து அதில் தானும் நடித்தவர்.

இடம்பெயர்ந்து பிராண்ஸ் நாட்டில் வசித்து வந்த போதும் தனது கலைப்பணியை பல கோணங்களில் வெளிக்கொணர்ந்தவர்.

ஐரோப்பிய நாடுகளில் புகழ்பெற்ற தமிழர்களின் தொலைக்காட்சியான TTN தொலைக்காட்சியிலும் பல நிகழ்ச்சிகளில் தோன்றி மக்களை மகிழ்வித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தார்.

அன்னாரின் இழப்பு ஈழத் தமிழ் கலையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றே.