Home செய்திகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காய் யாழ்-கச்சேரியில் காத்திருக்கும் மக்கள்!

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காய் யாழ்-கச்சேரியில் காத்திருக்கும் மக்கள்!

72
0

கடந்த மூன்று வார ஊரடங்கு நடைமுறையால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சிக்குண்டிருந்த வெளி மாவட்ட மக்கள் யாழ் கச்சேரியில் தமது பயண அனுமதிக்காக கூடியுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோ தொற்று அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தின் காரணமாக யாழ்மாவட்டத்திலேயே தங்கியிருந்த வெளி மாவட்ட மக்களே இவ்வாறு தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதியை பெற காத்திருக்கின்றனர்.

கொரோனா அச்சம் முற்றாக நீங்காத நிலையில் தற்போது தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் திரும்பவும் காலவரையின்றி போடப்படலாம் என்ற அச்சதினாலேயே மக்கள் முண்டியடித்து தமது சொந்த ஊர்களுக்கு திரும்ப முனைகின்றனர்.

இதந் காரணமாக சமூக இடைவெளி பேணத் தவறும் மக்களாலும், மக்களை உழுங்கு படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்து துரித கதியில் அவர்களுக்கான சேவையை தவறும் அதிகாரிகளாலும் மேலும் பலருக்கு நோத்தொற்று பரவ வாய்ப்புக்கள் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.