Home தாயக செய்திகள் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு – ஒரு சில வார்ங்களில் 1000ஐ தாண்டலாம்!

கொரோனா நோயாளர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு – ஒரு சில வார்ங்களில் 1000ஐ தாண்டலாம்!

111
0

இலங்கையில் கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையான கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர்.

பேறுவல பகுதிகைச் சேர்ந்த 11 பேர் உள்ளடங்கலாக புதிதாக இனம் காணப்பட்ட நோயாளர்களுடன் சேர்த்து இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை 321 ஆக உயர்வடைந்துள்ளது.

தநிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்கள் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த எண்ணிக்கை இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 4500 க்கும் அதிகமான மக்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப் படுத்தல் கால எலை முடிவுற்ற நிலையில் இதுவரை சுமார் 3000 பேர் வரையில் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியிருக்கும் 1500 பேரில் எத்தனை பேர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது இன்னும் சில நாட்களிலேயே தெரிய வரும். அது மட்டுமன்றி வீடுகளுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று இருக்க வாய்ப்புக்கள் உள்ளன.

ஏனெனில் தனிமைப் படுத்தல் முகாம்களில் இருந்த நைவருக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தொடர்பாகவே ஆராயப்பட்டுள்ளதாகவும், உடல் வெப்ப நிலை சோதிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

கொரோனா நோயை 100% கண்டுபிடிக்கும் PCR ஸ்கானிங் செய்யப்படவில்லை என்பதோடு, இலங்கையில் கொரோனா நோய் உறுதிப்படுத்தப்பட்ட சிலருக்கு அதற்கான எந்த அறிகுறிகளும் காணப்பட்டிருக்க இல்லை என வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் சுகாதார திணைக்களமும் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

எனவே அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியில் நடமாடுவதை தவிர்த்து மிக மிக அவதானமாக மக்கள் பாதுகாப்புடன் இருத்தல் அவசியமாகிறது.