Home உலக செய்திகள் பிரித்தானியாவில் 40% அதிக இறப்பு – அதிர்சியை ஏற்படுத்தியுள்ள ஆதார தகவல்!

பிரித்தானியாவில் 40% அதிக இறப்பு – அதிர்சியை ஏற்படுத்தியுள்ள ஆதார தகவல்!

367
0

பிரித்தானியாவில் – கொரோனா நோயினால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட தொகையை விட 40% வீதமான மரணங்கள் கொரோனா நோயினால் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், இன்று (21-04-2020) பிரித்தானியாவின் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டும் கடந்த 10ம் திகதி வரையான கொரோனா நோயாளர் இறப்பு 9,288 என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த திகதிக்குள் கொரோனா நோயினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 13,121 ஆக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் 3,833 மரணங்கள் தொடர்பான விபரங்கள் தாமதமாகவே கிடைத்துள்ளன. இதற்கு காரணம் இவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அல்லாமல் வீடுகளிலும், பராமரிப்பு நிலையங்களிலும் இறந்தவர்கள் ஆவர்.

ஆகவே, பிரிட்டன் மற்றும் வேல்ஸ் பகுதிகளில் மட்டுமே கடந்த 10ம் திகதி வரை 3,833 மரணங்கள் என்றால் பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளையும் உள்ளடக்கி இன்று வரையான கொரோனா நோயாளர் எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்பட்டதை விட சுமார் 40% அதிகமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நேற்று (20-04-2020) மதியம் வரை வெளியான தகவல்களின் அடிப்படையில் கொரோனா நோயினால் இறந்தோர் எண்ணிக்கை 16,509 ஆக இருந்த போதும் இன்றைய மேற்படி தகவலின் அடிப்படையில் இதுவரை அண்ணளவாக 25,000 பேர் வரையில் இறந்திருக்க கூடும் என கூறப்படுகிறது.