
தென்நிலங்கையிலும், மட்டக்களப்பிலும் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ள சிலர் இனம் காணப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை 304 ஆக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறு இனம் காணப்பட்டவர்களில் ஒருவர் மீன் வியாபாரி என்பதனால், அவர் வழக்கமாக மீன் வாங்கும் “பேலியகொட மீன் சந்தை” நாளை முதல் 3 நாட்களுக்கு மூடப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 25 புதிய கொரோன தொற்றாளர்கள் மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இனம் காணப்பட்ட நிலையில், அவர்களை இராணுவ பாதுகாப்புடன் காத்தான்குடி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.