Home தாயக செய்திகள் எண்மர் உயிர் பறித்த கொலையாளியின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

எண்மர் உயிர் பறித்த கொலையாளியின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்!

58
0

எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவை, அண்மையில் கோட்டபாய ராஜபக்ச பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ததற்கு எதிராக, உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சார்பில், சட்டத்தரணி கேசவன் சயந்தன் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை இலத்திரனியல் கோவைப்படுத்தல் முறைமையூடாக நேற்று (20-04-2020) தாக்கல் செய்திருந்ததார்.

இந்த வழக்கில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றில் வாதங்களை முன்வைக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொலையாளியான, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க – யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 19ஆம் திகதி, வீடுகளைப் பார்க்கச் சென்ற 8 பொதுமக்களை படுகொலை செய்யப்பட்ட வழக்கில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்.

இவ்வாறான ஒரு கொலையாளியை, கடந்த மாதம், 26ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் இலங்கையில் மட்டுமல்லாது நீதிக்கான பல சர்வதேச அமைப்புக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்த நிலையிலேயே, சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி அளித்த பொதுமன்னிப்பை மீள் பரிசீலனை செய்து, அதனை ரத்து செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.