Home செய்திகள் எவர் கருத்தும் தேர்தலில் அழுத்தம் செலுத்தாது – தேர்தலுக்கான சூழலை ஆராய்ந்த பின்னரே முடிவு!

எவர் கருத்தும் தேர்தலில் அழுத்தம் செலுத்தாது – தேர்தலுக்கான சூழலை ஆராய்ந்த பின்னரே முடிவு!

81
0

தேர்தல் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தாலும் அவை எதுவும் தேர்தலில் தாக்கம் செலுத்தாது. தேர்தலுக்கான சூழல் தொடர்பில் ஆராய்ந்தே முடிவு எட்டப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முகப்பு பக்கத்தில் (Facebook) தெரிவித்திருப்பதாவது,

தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்று அதுவும் இல்லை. இது மூன்று பேர் தொடர்புபட்ட விடையம். தேர்தலை நடாத்த ஏதுவான சூழலை ஏற்படுத்துவது தொடர்பிலும், பக்கச் சார்பற்ற களத்தில் தேர்தலை நடாத்துவது தொடர்பிலுமே ஆணைக்குழு பரிசீலிக்கும்.

அத்தோடு, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து விடையங்களையும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ளப்பட்ட பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.

இதற்காக கொரோனா வைரஸ் ஒழிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினருடனும் ஆணைக்குழு கலந்தாலோசிக்கும்.

நான் என்றும் அரசியலமஇப்பிற்கும், ஜனனாயகத்திற்கும், மக்களிற்கும் சார்பாகவே செயற்பட்ட்டுள்ளேன்.

1983 ஆம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழுவில் சேவையில் இணைந்ததில் இருந்து இன்று வரை எந்த சந்தர்ப்பத்திலும், எந்த அசசியல் வாதிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் சாதகமாக செயற்பட்டதில்லை என வர் அதில் குறிப்பிட்டுள்ளார்.