Home செய்திகள் ஊரடங்கு தளர்வு – யாழில் வீதி எங்கும் மக்கள் கூட்டம்!

ஊரடங்கு தளர்வு – யாழில் வீதி எங்கும் மக்கள் கூட்டம்!

54
0

கொரோனா அச்சத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நீடித்திருந்த ஊரடங்கு இன்றைய தினம் காலை தளர்த்தப்பட்ட நிலையில் வீதி எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதுவதை காணமுடிந்தது.

குறிப்பாக சிகை அலங்கரிப்பு நிலையங்கள், வங்கிகள் மற்றும் கடைகளிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதோடு , இன்று வைத்தியசாலைகளில் அதிக எண்ணிக்கையான மக்கள் செல்வதையும், காண முடிந்தது.

மக்கள் நடமாட்டத்திற்கு மத்தியில் காவல்துறையினரும், இராணுவத்தினரும் ஆங்காங்கே நிற்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது.