Home செய்திகள் ஊரடங்கு தளர்வு நேரங்களில் மாற்றம் – சற்று முன் வெளியான தகவல்!

ஊரடங்கு தளர்வு நேரங்களில் மாற்றம் – சற்று முன் வெளியான தகவல்!

68
0

இலங்கையில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீர்மானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சற்று முன் ஜனாதிபதி செயலகம் ஊடக ஆறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கொழும்பு, கம்பஹா,களுத்துறை, புத்தளம் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) காலை ஐந்து மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் ஏப்ரல் 24 வெள்ளி இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் காலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அதாவது, வார இறுதி நாட்களான 25 சனி மற்றும் 26 ஞாயிறு ஆகிய தினங்கள் இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும் எனவும், அனைத்து மாவட்டங்களிலும் கடுமையாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்பதால் அனைவரும் சட்ட ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.