Home செய்திகள் உள் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் நாட்டிற்கு அச்சுறுத்தல்!

உள் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் நாட்டிற்கு அச்சுறுத்தல்!

61
0

உள் நோக்கம் கொண்ட தீர்மானத்தாலும், உடனடியாக நீக்கப்பட்ட ஊரடங்கு சட்டத்தாலும் நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று தெரிவிக்கையில்,

இவ்வாறு உள் நோக்கத்தோடு திடீரெனவும், உடனடியாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் இதுவரை மேற்கொண்ட அத்தனை உழைப்புக்களும் அர்த்தமற்றதாகி விடும்.

சுகாதாரத் துறை ஊழியர்கள், பாதுகாப்பு துறையினர், வர்த்தகர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் அர்ப்பணிப்புடன் மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும், உழைப்புக்களும் வீணாகி அர்த்தமற்றதாகி விடும்.

உடநடியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டமையால் இத்தனை நாட்கள் முடங்கி இருந்த மக்கள் தமது தேவைகளுக்கா வெளியில் வரவே செய்வர். அவ்வாறான நிலையில் அதிக சன நெரிசலும், நோ பரவலும் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன என வர் சுட்டிக்காட்டினார்.