Home செய்திகள் இலங்கையில் இரு நாட்களில் 37 கொரோனா நோயாளர்…!

இலங்கையில் இரு நாட்களில் 37 கொரோனா நோயாளர்…!

63
0

இலங்கையில் கடந்த இரு நாட்களில் கொரோனா நோயாளர்களாக இனம் காணப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது நாட்டில் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளதாக அரசியல்வாதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேற்றைய தினம் 13 பேர் புதிதாக இனம் காணப்பட்டிருந்த நிலையில் இன்றும் 24 பேர் நோய்த் தொற்றாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

மேற்படி இனம் காணப்பட்ட நபர்கள் அனைவரும் கொழும்பு ஜெயவர்த்தனபுரத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதந் மூலம் இலங்கையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 293 ஆக உயர்வடைந்துள்ளதுடன், இதுவரை 7 பேற் குறித்த நோயினால் மரணமாஇந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திடீர் அறிவிப்பின் மூலம் நாடெங்கும் உடனடியாக இன்று ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதால் நோய்த் தொற்று மேலும் அதிகமாக பரவ வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டி பல அரசியல் வாதிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் தேர்தலை அவசரமாக நடாத்துவதற்கு முனையும் அரசாங்கத்தை கண்டித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, அவ்வாறு நடைபெற்றால் கொரோனா நோயினால் இறப்போருக்கு தேர்தல் ஆணையகமே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.