Home செய்திகள் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று – நோயாளர் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்தது!

மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று – நோயாளர் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்தது!

138
0

இன்றைய தினம் (19/04) மாத்திரம் 13 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது.

இதனை உறுதி செய்து கருத்து வெளியிட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் பழகிய சிலரே இவ்வாறு இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனால், நாளைய தினம் தளர்த்தப்பட இருந்த ஊரடங்கு நேரத்திலும், மாவட்டங்களிலும் மாற்ரங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள 25 மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பின் பின்னரே உறுதியான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.