
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 596 கொரோனா நோயாளர்கள் மரணமடைந்திருப்பதுடன், கொரோனா தொற்றுள்ளவர்களாக 5850 புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்றைய இத் தகவலைத் தொடர்ந்து பிரித்தானியாவில் இதுவரை கொரோனா நோயினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16,060 ஆக உயர்வடைந்துள்ளது.
சுமார் ஒரு இலட்சத்தி இருபதாயிரத்தை (120,067) தாண்டியுள்ள நிலையில் இன்னும் கொரோனா பரவும் அபாய நிலை அதிகமாகவே இருப்பதாகவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரிட்டன் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
அத்தோடு, தொளிலாளர்களுக்கான 80% கொடுப்பனவஇயும் மேலும் ஒரு மாதத்திற்கு நீடித்துள்ள பிரித்தானியா அரசாங்கம் தேவையற்று தகுந்த காரணங்கள் இன்றி வெளியில் நடமாடுவோருக்கு அதிக கட்டணங்களை தண்டமாக அறவிடவும் தீர்மானித்துள்ளது.
பிரிட்டனில் பல கொரோனா நோயாளர்கள் வைத்திய உதவியை நாடி தொடர்பு கொண்ட போதும் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்படாமலே வீடுகளில் இறந்து வருவதும் வேதனை மிக்க சம்பவங்களாக இருக்கின்றன.