Home செய்திகள் தொழில் செய்யும் இடத்திற்கு செல்லவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுமே ஊரடங்கு தளர்வு:

தொழில் செய்யும் இடத்திற்கு செல்லவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டுமே ஊரடங்கு தளர்வு:

57
0

ஊரடங்கு சட்டம் நாளை முதல் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்த வேறு தேவைகளுக்காக வீதிகளுக்கு வர வேண்டாமென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலத்தில் தாம் இருக்கும் இடத்திலிருந்து தொழில் செய்யும் இடத்திற்கு செல்வதற்காக மட்டுமே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நகரங்களுக்கிடையேயும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து வேறு தேவைகளுக்கு செல்ல முடியாது.

சொந்த இடங்களுக்கு செல்ல முடியாது வீடுகளிலோ , தங்கு விடுதிகளிலோ தங்கியிருப்போருக்கு, தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக இந்த ஊரடங்கு சட்டம் அகற்றப்படவில்லை. எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் நேரங்களில் பொதுமக்கள் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து தங்களுடைய தனிமைப்படுத்தலையும், சமூக இடை வெளியினையும் பேணி அவர்கள் நடந்து கொள்வது மிக மிக அவசியமானது. இவ்வாறான நடைமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றி தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.