
நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமை குறித்தும், அரச பணிகள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள் போன்றவற்றை மீள ஆரம்பிப்பது, மற்றும் தேர்தல் தொடர்பான கலந்தாய்வு செய்வதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களையும் நாளை மறுதினம் (20-04-2020) திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இயல்பு நிலைக்கு துரித கதியில் நாட்டை கொண்டு செல்ல அரசு முனையும் சம காலத்தில், நாட்டில் குறிப்பாக இலங்கை தலைநகர் கொழும்பு உட்பட்ட 6 மாவட்டங்களில் கொரோனா அச்சம் தொடர்ந்து உள்ளமையால் கட்டுப்பாடுகளை தளர்த்தவோ, மக்களை வெளியில் நடமாட அனுமதிக்கவோ சுகாதார திணைக்களம், ஆசிரியர் சங்கம, பாதுகாப்பு துறை என்பன தொடர்ந்து எச்சரிக்கையை விடுத்து வருவதோடு, அச்ச சூழல் நீங்கும் வரை பொறுத்து போவதே நாட்டிற்கு நன்மை என தெரிவித்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.