Home உலக செய்திகள் மீண்டும் சீனாவில் கொரோனா – ஒரே நாளில் 1290 பேர் மரணம்!

மீண்டும் சீனாவில் கொரோனா – ஒரே நாளில் 1290 பேர் மரணம்!

114
0

கொரோனா நோயின் ஆரம்ப நாடுமான சீனாவில் கடந்த மூன்று வாரங்களின் பின்னர் திடீரென பெருந்தொகையான மக்கள் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளமை புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 வாரங்களாக COVID-19 வைரஸின் தாக்கம் மிகக் குறைந்ததை அடுத்து வழமைக்கு திரும்பிய சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளர்கள் மெல்ல மெல்ல அதிகரித்து சென்று வந்த நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 1290 பேர் குறித்த நோயினால் மரணமடைந்துள்ளனர்.

இதனால் கொரோனா நோய் திரும்ப திரும்ப வரும் என்ற அச்சம் தற்போது உலகை ஆட்கொண்டுள்ளது.

இதுவரை கொரோனா நோயிற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த நோயினால் முடங்கிப் போயுள்ள உலக நாடுகள் மேலும் பொருளாதார பின்னடைவை சந்திக்க நேரிடும் எனவும், இன்னும் பல இலட்சம் மக்கள் இறக்க நேரிடும் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.