Home செய்திகள் நீடிக்கும் – பிள்ளைகளை தேடி அலைந்த பெற்றோரின் மரணங்கள்!

நீடிக்கும் – பிள்ளைகளை தேடி அலைந்த பெற்றோரின் மரணங்கள்!

81
0

காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளையும், உறவுகளையும் தேடி அலைந்த பெற்றோர்களும், உறவுகளும் கடைசி வரை தமது பிள்ளைகளை சந்திக்காமலே இறந்துவரும் அவல நிலை தொடந்தவண்ணம் உள்ளது.

அந்த வரிசையில் முல்லைத்தீவு – கைவேலி பகுதியில் 50 வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்த பொன்னையா நாகராசா என்பவர் இன்றைய தினம் சாவடைந்துள்ளார்.

இவர் 18 வயதான நா.பிரதாஸ் எனும் தனது மகனை 2009 ஆம் ஆண்டு பொக்கணை பகுதியில் தவறவிட்ட நிலையில் அவர் தொடர்பான விபரங்களை அறிய அரச திணைக்களங்கள் எங்கும் ஏறி இறங்கி களைத்துப் போய் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என அனைத்திலும் ஓய்வின்று கலந்து கொண்டவர்.

இவரது இன்னுமோர் மகள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்து மாவீரர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.