Home செய்திகள் நாளாந்த கூலி தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 20 இல் 5000 ரூபா கொடுப்பனவு!

நாளாந்த கூலி தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 20 இல் 5000 ரூபா கொடுப்பனவு!

102
0

நாட்டில் நிலவும் கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டு வருமான இன்றி தவிக்கும் நாளாந்த கூலித் தொழிலாளர்களுக்கு வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) 5000 ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கட்டிட வேலைக்காரர், மர தளபாடம் செய்பவர்கள் , மின்சார தொழில்நுட்ப தொழிலாளர்கள் உள்ளிட்ட பவ்வேறு பிரிவுகளை சேர்ந்தோருக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த கொடுப்பனவுக்கான விண்ணப்பங்களை கிராமிய குழுக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழுக்களின் அதிகாரிகள் மூலம் குறித்த தொழிற்துறையில் ஈடுபடுவோருக்கு அந்த தொகையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.