
தமிழ்நாடு – நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் தமிழக அரசிற்கு “கொரோனா தடுப்பு நிதியாக” ரூபா 10,000 ஐ வழங்கியுள்ளனர்.
குறித்த முகாமில் சுமார் 4000 ஆயிரம் ஈழத் தமிழ் அகதிகள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர்.
மிகவும் வசதி அற்ற குடியிருப்பாக (10×10) அளவில் கட்டப்பட்ட சிறு குடிசைகளில் வாழ்ந்துவரும் இவர்களில் சிலர் முன்வந்து தற்போதைய நிலைமையில் நாமும் ஏதேனும் பங்களிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டதற்கு இணங்க அனைவருமாக 10, 20 ஆக குருவி சேர்ப்பதை போல் சேர்த்து தமிழக அரசிற்கு பத்தாயிரம் ரூபாவை கொரோனா தடுப்பு நிதியாக வழங்கியுள்ளனர்.
இச் செயலால் நாமக்கல் அதிகாரிகள் நெகிழ்வடைந்துள்ளதோடு, பல கஸ்டங்களுக்கு மத்தியிலும் மனித நேயத்தை வெளிக்காட்டி உதவிய ஈழத் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இனம், மதம், மொழி, கடந்து உதவி என்றவுடன் ஓடிச் சென்று உதவும் தமிழர் பண்பாடு இங்கும் காக்கப்பட்டுள்ளது.