Home செய்திகள் மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன் லண்டனில் கொரோனா நோயால் மரணமானார்!

மிருதங்க வித்துவான் ஆனந்தநடேசன் லண்டனில் கொரோனா நோயால் மரணமானார்!

181
0

பிரித்தானியாவில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட மிருதங்க வித்துவான் திரு.ஆனந்தநடேசன் அவர்கள் கொரோனா நோய் காரணமாக லண்டனில் மரணத்தை தழுவியுள்ளார்.

கலைத் துறையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயலாற்றி வந்த சிறந்த மிருதங்க வித்தகரான திரு.ஆனந்தநடேசன் அவர்கள் மிகவும் மென்மையான இதயமும், அன்பாக பழகும் சுபாபமும் கொண்டவர்.

பிரித்தானியாவில் ஏறாளமான கலை நிகழ்வுகளில் தனது திறமையை வெளிக்காட்டி அனைவர் மனதிலும் குடிகொண்டிருந்த திரு.ஆனந்தநடேசன் அவரது பிரிவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி தமிழ் கலை உலகிற்கும் ஈடு செய்யமுடியாதது.

கொரோனா நோயினால் பிரித்தானியாவ்வில் இறந்த 18 பேரில் இவரும் 19 ஆவதாக இணைந்துகொண்டுள்ளார்.