Home உலக செய்திகள் 20 இலட்சத்தை தாண்டியது கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

20 இலட்சத்தை தாண்டியது கொரோனா நோயாளர் எண்ணிக்கை!

255
0

மூன்று மாதங்களுக்கு முன் உலகெங்கும் பரவத் தொடங்கிய COVID-19 வைரஸ் தாக்கத்தினால் கொரோனா நோயாளர்கள் எண்ணிக்கை இன்று உலகம் முழுவதுமாக 20 இலட்சத்தை கடந்துள்ள நிலையில் உலகே உறைந்துபோயுள்ளது.

மிகவும் தொன்மையான தமிழர்களின் நாட்டு வைத்திய முறை மூலம் குணப்படுத்தலாம் என சில ஆயுர்வேத வைத்தியர்கள் அறிவித்த போதும் அதை ஏனோ இன்றுவரை உலக நாடுகள் அதனை ஏற்க மறுத்தது மட்டுமன்றி எந்த மருந்தையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதே உலகெங்கும் மக்கள் கொத்துக் கொத்தாக மரணிக்க காரணமாக அமைந்துள்ளது.

இன்று காலை வரை வெளியான தரவுகளின் படி உலகளவில் இதுவரை 126,811 பேர் கொரோனா நோயினால் இறந்துள்ளனர். 2,004,383 பேர் (2 மில்லியன் 4 ஆயிரத்து 383 பேர்) இக் கொடிய நோயனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத் தொகையில், அமெரிக்காவில் மட்டும் 6 இலட்சத்திற்க்உம் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுளளதோடு, 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். நேற்றைய தினம் மட்டும் 2,407 பேர் மரணமடைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.