Home தாயக செய்திகள் யாழ் மாவட்டத்தில் 8 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!

யாழ் மாவட்டத்தில் 8 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிப்பு!

127
0

யாழ்ப்பாணத்தில் மேலும் 8 பேருக்கு கோரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள 14 பேருக்கு நேற்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இரண்டாவது தடவையாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதே அவர்களில் 8 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் இருவர் (வயது 7 மற்றும் 11). ஏனையவர்கள் 5 பேரும் ஆண்கள் என்பதும், அதிலும் 7 பேர் அரியாலையைச் சேர்ந்தவர்கள், ஒருவர் மாத்திரமே வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 15ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை, தென்னிலங்கையில் இருந்து கொண்டுவரப்பட்டு முழங்காவில் கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களிலும் 4 பேருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தன் மூலம் நேற்று மாத்திரம் வடாமாகாணத்தில் 12 பேர் புதிதாக COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுளளது.