Home உலக செய்திகள் இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 38 பேர் பலி – வெளவால்களில் வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு!

இந்தியாவில் 24 மணித்தியாலங்களில் 38 பேர் பலி – வெளவால்களில் வைரஸ் இருப்பது கண்டுபிடிப்பு!

80
0

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதுடன் இதுவரை 377 பேர் இந்த நோயினால் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கத்தின் போது வவ்வால்களில் வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டதை அடிப்படையாக கொண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் 10 மாநிலங்களில் உள்ள 2 வகையான வவ்வால் இனங்களில் COVID-19 வைரஸ் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட போது தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள வவ்வால் இனங்களில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மற்ற விலங்குகளிலும் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் பரிந்துரக்கப்பட்டுள்ளது.