Home உலக செய்திகள் பிரிட்டனில் இயல்பு நிலை முடக்கத்தினை மேலும் 3 வாரங்கள் நீடிக்க தீர்மானம்!

பிரிட்டனில் இயல்பு நிலை முடக்கத்தினை மேலும் 3 வாரங்கள் நீடிக்க தீர்மானம்!

151
0

பிரிட்டனில் தற்போது அமுலில் உள்ள இயல்பு நிலை முடக்கத்தினை மேலும் 3 வாரங்கள் நீடிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது குறித்து பிரித்தானியாவின் தற்காலிக பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான Dominic Raab கூறுகையில்,

பிரித்தானியாவில் தாம் எதிர்பார்த்ததை விட COVID-19 வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், அதன் பரவும் தன்மை இன்னும் வீரியத்துடன் அதிக அளவில் இருப்பதால் இயல்பு நிலை முடக்கத்தினை இன்னும் 3 வாரங்களுக்கு நீடித்து அதிக உயிர் இழப்புக்களை தவிர்க்க தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் பிரித்தானியாவின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் COVID-19 வைரஸின் தாக்கத்தினால் சுமார் 10 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்படலாம் என கூறியிருந்தார்.

ஆனால் தற்போதைய தரவுகளின் படி COVID-19 வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியுள்ளமையும், உயிரிழப்புக்கள் மட்டுமே 12 ஆயிரம் வரை சென்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.