Home செய்திகள் பணியாற்ற மறுத்து நிர்வாகத்தில் முரண்டு பிடித்த மருத்துவர் த.குகதாசன் அவசர இடமாற்றம்:

பணியாற்ற மறுத்து நிர்வாகத்தில் முரண்டு பிடித்த மருத்துவர் த.குகதாசன் அவசர இடமாற்றம்:

85
0

யாழ் – வடமராட்சி பிரதேசத்தின் பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை, உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றுமாறு சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு பணித்துள்ளது.

இந்தத் தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

நீண்ட காலமாக பருத்தித்துறை (மந்திகை) ஆதார வைத்தியசாலையில், காணப்படும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தற்போது உச்சமடைந்திருப்பதுடன், கொரோனா அச்சத்தை காரணம் காட்டி நோயாளர்களை பார்வையிட மறுத்து வந்த தற்போதைய அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பான முறையிலும், ஒற்றுமையாகவும் கடமையாற்றுவதற்கு ஒத்துழைக்காத நிலையில் அவரை உடனடியாக இடமாற்றவேண்டும் என்று வலியுறுத்தி அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் அரச மருத்துவ அதிகாரி சங்கத்தின் மருத்துவர்கள், இன்று 14.04.2020 சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்திருந்த நிலையிலேயே மேற்படி அறிவிப்பு இன்று விடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பையடுத்து இன்றைய பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசனை, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமைக்கு இன்றே இடமாற்றுமாறும், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையான விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறும் சுகாதார அமைச்சு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.