
கனடா – ரொறண்டோ பகுதியில் வசித்து வந்த ஈழத் தமிழ் பெண் ஒருவர் கொடிய கொரோனா நோயிற்கு உட்பட்டு மரணமடைந்துள்ளார்.
தாயகத்தில், யாழ் – நெடுந்தீவை சொந்த இடமாகவும், பின்னர் வட்டக்கச்சி – இராமநாதபுரத்தில் வசித்துவந்தவரும், கனடா – ரொறண்டோவில் குடும்பத்தின்அருடன் புலம்பெயர்ந்து வசித்து வந்தவருமான 56 வயதுடைய திருமதி. புஸ்பராணி நாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இவரது கணவரான நாகராஜாவும் (சோதி) கொரோனா நோயிற்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதே வேளை, இவரது பிள்ளைகளுக்கும் இந்த நோய் தொற்றிய போதும் அவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.