Home உலக செய்திகள் இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!

இந்தியா முழுவதும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டது ஊரடங்கு சட்டம்!

59
0

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது என்பதால், அதைக் கட்டுப்படுத்த அடுத்த மாதம் (மே) 3ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் நாடுமுழுவதும் நீட்டிக்கப்படுவதாக என்று பிரதமர் மோடி 14-04-2020 இன்று அறிவித்துள்ளார்.

பிரதமர்மோடி அறிவிக்கும் முன்பே தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் ஏப்ரல்30-ம் திகதிவரை ஊரடங்கை நீட்டித்திருந்த நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதுமாக கொரோனா நோயினால் இதுவரை 358 பேர் மரணமடைந்திருப்பதுடன் 10,541 பேர் COVID-19 வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.