Home செய்திகள் முற்றுகைக்குள் இருந்து மீண்ட தாவடி கிராமம்!

முற்றுகைக்குள் இருந்து மீண்ட தாவடி கிராமம்!

59
0

மூன்று வார்ங்களாக இராணுவ, மற்றும் காவ்ல்துறையினரின் முற்றுகைக்குள் இருந்த தாவடிக் கிராமம் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி தாவடிக் கிராமத்திலிருந்தே இனம் காணப்பட்டிருந்த நிலையில், அக் கிராமம் 3 வாரங்களாக பாதுகாப்புத் தரப்பினரின் முற்றுகைக்குள் வைக்கப்பட்டிருந்ததுடன் கிராமத்தில் இருந்து யாரும் வெளியேறவோ, அல்லது உள்நுழையவோ தடை விதிக்கப்பட்டிருந்தது.

அப்பிரதேசம் எங்கும் கிருமி நாசினி விசிறல்கள் முடிவடைந்ததாலும், இதுவரை வேறு யாரும் அப் பிரதேசத்தில் கொரோனா நோயிற்கு உள்ளானமை கண்டுபிடிக்கப்படாமையாலும், மூன்று வாரங்கள் கடந்த நிலையில், புதுவருடப் பிறப்பை முன்னிட்டு இன்று (13-04) காலை குறித்த முற்றுகையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, வடக்கு மாகாணத்தில் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 300 இற்கும் மேற்பட்டவர்களும் இன்று திங்கட்கிழமை கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் நேற்று முன்தினம் கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.