Home உலக செய்திகள் பிரிட்டனிலும், பிரான்ஸிலும் தொடரும் தமிழர் மரணங்கள்!

பிரிட்டனிலும், பிரான்ஸிலும் தொடரும் தமிழர் மரணங்கள்!

558
0

பிரிட்டனிலும், பிரான்ஸிலும் கடந்த சில நாட்களாக தினமும் தமிழர்கள் கொரோனா நோயினால் மரணமடைந்து வருகின்றனர்.

இன்று 13-04-2020 திங்கள் காலையும் பிரிட்டனில் வசித்துவந்த யாழ், மயிலிட்டியை சொந்த இடமாக கொண்ட சின்னையா அமிர்தலிங்கம் என்பர் கொரோனா நோயினால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருடந் சேர்த்து பிரித்தானியாவில் கொரோனா நோயிற்கு பலியான தமிழர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.

இதே வேளை, பிரான்ஸிலும் தினமும் கொரோனா நோயால் தமிழர்கள் இறந்து வரும் நிலையில் நேற்று முந்தினம் யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைச் சொந்த இடமாகக் கொண்ட 46 வயதுடைய திருமதி. சசிதேவி சதீஸ்குமார் என்பவர் கொரோனா நோயினால் மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை பிராண்ஸில் 14,393 பேரும், பிரிட்டனில் 10,612 பேரு உள்ளடங்கலாக உலகளவில் இதுவரை கொரோனா நோயினால் 115,099 பேர் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.