Home உலக செய்திகள் தமிழ் நாட்டில் மட்டும் 11 மரணங்கள் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969!

தமிழ் நாட்டில் மட்டும் 11 மரணங்கள் – பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 969!

88
0

தமிழக அரசு நேற்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும், கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 969 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது தமிழகத்தில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது.

இதேவேளை, இந்தியா முழுவதுமாக இதுவரை கொரோனா நோயினால் 331 பேர் மரணமடைந்துள்ளதுடன், 9.240 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.