Home செய்திகள் கிளி – ஸ்கந்தபுரத்தில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

கிளி – ஸ்கந்தபுரத்தில் கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்!

77
0

கிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் கால்வாயிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

45 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் என்பவரது சடலமே, ஸ்கந்தபுரம் பகுதியூடாக செல்லும் அக்கராயன் குளம் நீர்ப்பாசன கால்வாயின் மூன்றாம் வாய்க்கால் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றதாகவும் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட நீதிவான் ரீ.சரவணராஜா சடலத்தை பார்வையிட்டதுடன் உடற்கூற்று பரிசோதனைக்குட்படுத்தி சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பணித்துள்ளார்.